தமிழகத்தில் கெயில் நிறுவனம் சார்பில் நெடுஞ்சாலையோரத்தில் குழாய் பதிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் கெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.  அப்போது, விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழகத்தில் 8 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், 4 திட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கெயில் திட்டத்தின் மூலம் குழாய் பதிக்கப்படுவதால் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அப்போது நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த விவசாயியின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். இந்த அரசை பொறுத்த வரை எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து, அவர்களின் முழு ஒத்துழைப்பை பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்….

The post தமிழகத்தில் கெயில் நிறுவனம் சார்பில் நெடுஞ்சாலையோரத்தில் குழாய் பதிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: