நீதிமன்றங்களில் வசதிகள் குறைவாகவே உள்ளன; நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும்.! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

ஐதராபாத்: நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஐதராபாத்தில் பேசினார்.  தெலங்கானா மாநில நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், ‘நாடு  முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறோம். அதேபோல், நீதிபதிகள் மற்றும் பிறரின் பாதுகாப்புப் பிரச்னைகளும்  குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். நீதித்துறைக்கான ஆற்றலை காட்டிலும் அதிக வேலைகள் சுமையாக உள்ளன. நாட்டில் நீதித்துறையும் பலப்படுத்தப்பட வேண்டும்; ஆனால் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தேவையான வசதிகள் குறைவாகவே உள்ளன. நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். நீதிமன்றங்கள் மற்றும் அதன் வெளிப்பகுதிகளிலும் போதிய பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்’ என்றார். …

The post நீதிமன்றங்களில் வசதிகள் குறைவாகவே உள்ளன; நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும்.! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: