ஊரடங்கு தளர்வால் கல்லூரிகள், 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கின: மாணவ, மாணவிகள் ஆர்வம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும்,  9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின.    கொரோனா தொற்று பரவாமல் இருக்க பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தசூழ்நிலையில், தற்போது கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பரில் வகுப்புகள் தொடங்கின.  அதன் தொடர்ச்சியாக, பொதுத்தேர்வு எழுதவேண்டிய 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19ம்தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் கீழ் வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 8ம் தேதிமுதல் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதேபோல, பள்ளிகளில்  9 மற்றும் 11ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கும்  8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது.  அதன்பேரில் நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து நேற்று  காலை முதல் 9 மணிக்கே மாணவ, மாணவிகள் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆர்வமாக வரத் தொடங்கினர். ஆனால் சில கல்லூரிகள், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளையே தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.   பள்ளிகளை பொறுத்தவரையில், ஒரு வகுப்பில் குறைந்த பட்சம் 25 மாணவர்கள் வீதம் அமர அனுமதிக்கப்பட்டனர்.  அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் சில வகுப்புகள், பாடப் பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் எனவும், காலை, மாலை என 2 ஷிப்டு முறையில் செயல்படலாம் எனவும் கல்வித்துறை தெரிவித்திருந்தது.   நேற்று பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் சம்மதக் கடிதம் பெற்று வந்திருந்தனர். அவர்கள் உணவு, குடிநீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்து வந்திருந்தனர். சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் உணவு சமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பிறகு வகுப்புகள் தொடங்க உள்ளன. அனைத்து கல்லூரிகள், 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டதை அடுத்து இதுவரை பள்ளிகளுக்கு வர அச்சப்பட்டு வீடுகளில் இருந்த மாணவர்களும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியரும் நேற்று முழுவதுமாக பள்ளிகளுக்கு வந்தனர். நேற்று மட்டும் 90 சதவீத வருகைப் பதிவு இருந்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்….

The post ஊரடங்கு தளர்வால் கல்லூரிகள், 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கின: மாணவ, மாணவிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: