இது குறித்து சோனா கூறியதாவது: எனது வாழ்க்கை போராட்டமானது. பலரை நம்பி ஏமாந்தேன், சொந்த படம் எடுத்து நஷ்டம் அடைந்தேன். பாலியல் ரீதியிலான பிரச்னைகளை சந்தித்தேன். நல்ல நடிகையாக வளர வேண்டும் என்று நம்பி சினிமாவுக்கு வந்த நான் கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டேன். கவர்ச்சி இமேஜால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது. என் கதையை நானே இயக்கி நடித்தால் என்ன என்று தோன்றியது. 2014ம் ஆண்டே மும்பையில் இயக்குனர் கோர்ஸ் படித்தேன். என்னை இயக்கிய இயக்குனர்களிடமிருந்து நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த தொடரை நானே இயக்குகிறேன்.
The post சோனா வாழ்க்கை வெப் தொடராகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.