மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் தொடர்ந்து 3ம் முறையாக யெச்சூரி மீண்டும் தேர்வு

திருவனந்தபுரம்:   கேரள மாநிலம், கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது தேசிய மாநாடு கடந்த 6ம் தேதி தொடங்கியது. பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி  இதை தொடங்கி வைத்தார். ேநற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 5 நாள் மாநாட்டின் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கண்ணூர் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இந்த மாநாட்டில் 85 பேர் கொண்ட புதிய மத்திய கமிட்டியும், 17 பேர் கொண்ட புதிய பொலிட்பீரோ உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய கமிட்டியில் 17 பேர் புதுமுகங்கள் இடம் பெற்றனர். இதில் 15 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், மத்தியக் கமிட்டி கூடி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரியை மீண்டும் தேர்வு செய்தது. கடந்த 2015ல் விசாகப்பட்டினத்தில் நடந்த 21வது மாநாட்டில் பிரகாஷ் காரத்துக்கு பதிலாக யெச்சூரி  பொதுச் செயலாளராக தேர்வு  செய்யப்பட்டார். பின்னர், 2018ல் ஐதராபாத்தில் நடந்த தேசிய மாநாட்டில் இவர் 2வது முறையாக இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது, 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்திய குழு பெண் உறுப்பினர் மாரடைப்பால் மரணம்மாநாட்டில் கேரளாவை சேர்ந்த மத்தியக் கமிட்டி உறுப்பினரான ஜோசபின் (73) கலந்து கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மேடையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை கண்ணூரில் உள்ள  மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் மரணமடைந்தார். இவருடைய உடல், கொச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனைக்காக வழங்கப்பட உள்ளது….

The post மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் தொடர்ந்து 3ம் முறையாக யெச்சூரி மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: