கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தித்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி-மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தித்துறை சார்பில் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செய்தித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆவின், மகளிர் மேம்பாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள்துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுதுறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கடந்த 7 நாட்களாக அரசின் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கண்காட்சி இறுதிநாளான நேற்று செய்தித்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் துணைவியார் விஜிதா அன்னிமாலா தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கோட்டாட்சியர் சரவணன், கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவர் சுப்ராயலு, கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள், இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த சைக்கிள் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கச்சிராயபாளையம் சாலை, காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு, துருகம் சாலை வழியாக மாடூர் டோல்கேட் வரை சைக்கிள் பேரணியாக சென்றனர். பின்னர் அதே வழித்தடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டி நற்சான்று வழங்கினார்….

The post கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தித்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி-மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: