மதுரை ரயில்வே மேம்பாலத்தில் புனரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார்(அதிமுக) பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ், மதுரை ரயில்வே மேம்பாலத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “ரயில்வே பாலம் அமைப்பதற்கான நில கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் இதுக்குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தாமதமாவதால் விலைவாசி மற்றும் திட்டத்தின் மதிப்பீடு உயர்கிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே மேம்பால பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்….

The post மதுரை ரயில்வே மேம்பாலத்தில் புனரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.

Related Stories: