கோவையில் தொழிற்சாலை கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

கோவை: கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகில் இருக்கக்கூடிய சுற்றுவட்டாரங்களில் 5 கிராமங்கள் உள்ளது. இங்கு இயங்கக்கூடிய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறி உள்ளதால் அதனை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இப்பகுதியில் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் நிறம் பச்சை நிறமாக மாறி இருப்பதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுவதால் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பல்வேறு ரசாயன வேதிப்பொருட்களின் தன்மை இருப்பதும், பயன்படுத்த உகந்தது அல்ல என்பதும் தெரியவந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கோவையில் தொழிற்சாலை கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: