இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: இன்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை  சந்தித்தது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே எல்லையில் நிலவி வந்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள், எல்லையில் உள்ள இருதரப்பு மூத்த ராணுவ அதிகாரிகள் அளவிலும், சில சமயம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அளவிலும் நடைபெற்று வந்தது.இந்தியா சீனா எல்லையில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்க வேண்டிய கட்டாயம் இரு தரப்பிலும் நிலவுகிறது. ஏனென்றால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது அமைதி நிலவினாலும், பல்வேறு பகுதிகளில் இன்னும்  -பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. சமீபத்தில் கூட எல்லா பகுதில் இருந்து ஒரு இளைஞரை சீன ராணுவம் கடத்தியதாக கூறப்பட்டது. பின்னர் இந்திய ராணுவ அதிகாரிகள் சீன ராணுவத்தை தொடர்பு கொண்டு அந்த இளைஞரை மீட்டனர். இந்நிலையில் வாங் இ-யின் இந்திய பயணம் குறித்து சீன அரசு சார்பிலோ, இந்திய அரசு தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புடன் சீனா இணைந்து செயல்படுவது குறித்த 2 வது அறிக்கை வெளியானது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வாங் இ, காஷ்மீர் விவகாரத்தில் ஏராளமான இஸ்லாமிய நண்பர்களின் அழைப்புகளை கேட்டிருக்கிறோம். எனக் கூறினார். காஷ்மீர் தொடர்பான அவரது கருத்துக்களை இந்தியா உடனடியாக நிராகரித்ததுடன் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பாக்சி, நாடுகளும் அரசுகளும் இதுபோன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தங்கள் நாட்டிற்கு ஏற்படும் அவப்பெயரை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பது சர்வதேச கவனத்தை பெற்று உள்ளது. நேற்றைய தினம் கல்லூரி விழா ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், கடந்த ஆண்டுகளில் சீனாவுடனான நமது உறவு இந்த அளவுக்கு மாறும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என வர தெரிவித்தார். இதன்மூலம் நமது பாதுகாப்புத் திறன் குறித்து சர்வதேச சமூகத்துக்கு புரிதலை தருவதுடன் இந்தியாவுக்கு ஆதரவை அதிகம் பெற்றுத்தரும் என அவர் கூறினார். 2020-ல் இருநாட்டு ராணுவ மோதலுக்கு பிறகு இந்தியா – சீனா இடையிலான  உயர்மட்ட ஆலோசனையானது தற்போது நடைபெற்று வருகிறது. …

The post இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: