விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்வு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் துவரை, துவரம்பருப்பு மூட்டைக்கு ரூ.300, பாமாயில் டின்னுக்கு ரூ.35, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. தான்சானியா, உக்ரைனில் இருந்து இறக்குமதியான துவரை பெரிதாக இருப்பதாலும், உள்நாட்டில் துவரை விளைச்சல் குறைவாலும் துவரை, துவரம் பருப்பு 100 கிலோ மூட்டைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. (அடைப்பிற்குள் கடந்த வார விலை) உக்ரைன் துவரை (100 கிலோ) – ரூ.6,000 (5,700), தான்சானியா துவரை  – ரூ.6,800 (6,500), லயன் துவரை  – ரூ.7,200 (6,900), துவரம் பருப்பு இறக்குமதி  – ரூ.8,700 (8,400), துவரம் பருப்பு  – ரூ.9,700 (9,400), உடைப்பு துவரம் பருப்பு  – ரூ.9,200 (8,900). மலேசியாவில் பாமாயில் விலை உயர்வால் பாமாயில் (15 கி) டின்னுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.1,785 (1,740), பாமாயில் விலை அதிகரிப்பால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 உயர்ந்து (15கி) ரூ.2,580 (2,550) என விற்பனையானது விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்:  உளுந்து (100 கிலோ) லயன்  – ரூ.8,900, பர்மா உளுந்து பெருவட்டு (புதுசு)  – ரூ.8,700, பர்மா பொடி  – ரூ.8,100, உருட்டு உளுந்தம்பருப்பு லயன்  – ரூ.10,900, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பெருவட்டு  – ரூ.10,700, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி  – ரூ.10,400, தொளி உளுந்தம்பருப்பு  – ரூ.9,100. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா பாசிப்பயறு (புதுசு)  – ரூ.9,200, இறக்குமதி பயறு  – ரூ.8,900, ஆந்திரா பயறு  – ரூ.8,700, பாசிப்பருப்பு லயன்  – ரூ.10,900, பாசிப்பருப்பு ஆந்திரா  – ரூ.11,100, இறக்குமதி பாசிப்பருப்பு  – ரூ.11,400. மல்லி (40 கிலோ) லயன்  – ரூ.3,050, மல்லி நாடு –  ரூ.3,100, கடலை பருப்பு 100 கிலோ மூட்டை  – ரூ.8,000, பொரிகடலை 55 கிலோ மூட்டை  – ரூ.4,400. பட்டாணி பருப்பு 100 கிலோ  – ரூ.7,800. பட்டாணி வெள்ளை –  ரூ.8,000, மசூர் பருப்பு உருட்டு  – ரூ.7,300. நிலக்கடலை பருப்பு (80கி)  – ரூ.7,300, கடலை புண்ணாக்கு (100கி)  – ரூ.4,400, எள் புண்ணாக்கு (50கி)  – ரூ.1,900, நல்லெண்ணெய் டின்  – ரூ.3,713. ஆந்திரா வத்தல் புதுசு –  ரூ.13,500, ஏசி வத்தல் குவிண்டால்  – ரூ.14,200 முதல் ரூ.15,200, தேஜா வத்தல்  – ரூ.15,000 முதல் ரூ.17,000, முண்டு வத்தல் ஏசி  – ரூ.13,000 முதல் ரூ.14,000, முண்டு வத்தல் சாதா  – ரூ.11,000 முதல் ரூ.12,000. மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள்  – ரூ.140, வெந்தயம்  – ரூ.90, கடுகு  – ரூ.80, சீரகம்  – ரூ.220, சோம்பு –  ரூ.140, மிளகு  – ரூ.420, கசகசா  – ரூ.1,200, கருப்பு எள் –  ரூ.200, புளி  – ரூ.160, வெள்ளை பூண்டு –  ரூ.160, மண்டை வெல்லம்  – ரூ.55, சுண்டல் (கருப்பு)  – ரூ.58, வெள்ளை  – ரூ.75, தட்டாம் பயறு  – ரூ.60 என விற்பனையானது.  …

The post விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: