கொடைக்கானலில் எழும்பள்ளம் ஏரி எப்போது தூர்வாரப்படும்?

கொடைக்கானல் : கொடைக்கானல்  மேல்மலை மன்னவனூர் கிராமத்திற்கு குடிநீர், பாசனத்திற்கு ஆதாரமாக  உள்ளது எழும்பள்ளம் ஏரி. இந்த ஏரியின் தடுப்பணையில் நீர் கசிவு இருப்பதாக  அக்கிராம மக்கள் தொடர்ந்து மனுக்களை மாவட்ட கலெக்டர் மற்றும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து எழும்பள்ளம்  ஏரியை குடிமராமத்து பணியின் கீழ் தூர்வார கடந்த 2020ம் ஆண்டு ரூ.95 லட்சம்  நிதியை ஒதுக்கினர். நிதி பெற்று வேலை துவக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில்  உள்ள அதிமுகவினர், தாங்கள்தான் இப்பணியை செய்ய வேண்டும் என முட்டுக்கட்டை  போட்டதால், இன்று வரை துவக்கப்பட்ட பணிகள் மேற்கொண்டு நடக்காமல் அப்படியே  கிடப்பில் கிடப்பதாக இக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிமுகவினர்  முட்டுக்கட்டையை அடுத்து, நீதிமன்றத்தின் உதவியுடன் ஆயக்கட்டு தேர்தல்  நடத்தி, விவசாய குழுவிற்கே பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு  பெறப்பட்டும், பணிகள் துவக்கப்படவில்லை.  இந்த கோடைக்காலத்தில் பணிகளை  துவக்கினால், எதிர்வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழையை  சேமிக்க முடியும். எனவே தமிழக அரசு எழும்பள்ளம் ஏரியின் தூர்வாரும் பணியை  விரைவில் துவங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள்,   விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொடைக்கானலில் எழும்பள்ளம் ஏரி எப்போது தூர்வாரப்படும்? appeared first on Dinakaran.

Related Stories: