ஐதராபாத்: எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான கண்டிகொண்டா யாதகிரி (49), கடந்த ஆண்டு புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற கண்டிகொண்டா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தெலங்கானா அரசு நிதி வழங்கியது. சில மாதங்கள் சிகிச்சை பெற்ற கண்டிகொண்டா யாதகிரி, ஓரளவு உடல்நிலை தேறி வீடு திரும்பினார். ஆனால், கட்டி அவரது முதுகு தண்டுவடத்தை கடுமையாக பாதித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஐதராபாத் வெங்கல் ராவ் நகரிலுள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்தார். ‘இட்லு ஸ்ரவாணி சுப்ரமண்யம்’, ‘இடியட்’, ‘போக்கிரி’, ‘சிறுத்தா’, ‘டெம்பர்’ மற்றும் விஜய்யின் ‘துப்பாக்கி’, ரஜினிகாந்தின் ‘லிங்கா’ ஆகிய படங்களின் தெலுங்கு பதிப்புக்கான பாடல்கள் உள்பட பல படங்களுக்கும், தனி இசை ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ள கண்டிகொண்டா யாதகிரியின் திடீர் மறைவு, தெலுங்கு படவுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….
The post தெலங்கானா முதல்வர் இரங்கல் பாடலாசிரியர் புற்றுநோய்க்கு பலி appeared first on Dinakaran.