கும்பகோணத்தில் வேத பாடசாலை கவர்னர் அடிக்கல் நாட்டினார்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா என்ற வேத பாடசாலை கட்டுவதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அடிக்கல் நாட்டினார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் ஒன்றியம், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தானில் வேத பாடசாலை தொடங்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, வேதபாடசாலைக்கு செங்கல் எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் கோயில் ஸ்தாபகர் விட்டல்தாஸ் மஹராஜ், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் விமூர்த்தானந்தர் மகராஜ், சேங்காலிபுரம் ராமதீட்சிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கும்பகோணத்தில் வேத பாடசாலை கவர்னர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: