பாசத்துடன் வளர்த்த பசுமாடு இறந்ததால் பெண் தற்கொலை

தஞ்சை: தஞ்சை மாரியம்மன்கோவில் மேல சித்தர்காடை சேர்ந்தவர் சந்திரசேகர்(37). இவரது மனைவி வசந்தி(36). தன் வீட்டில் ஒரு பசுமாட்டை மிகுந்த பாசத்துடன் வசந்தி வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பசு மாடு திடீரென இறந்து விட்டது. அப்போதிலிருந்து வசந்தி மனவேதனையில் இருந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பாசத்துடன் வளர்த்த பசுமாடு இறந்ததால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: