நில மோசடி வழக்கு…முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை நீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது. நில மோசடி வழக்கில் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்க புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘எனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அபகரித்து கொண்டார் என கூறி இருந்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தார்.அதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் ஜெயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது கூட்டுசதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரு வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் உள்ள ஜெயகுமாரை, நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜெயகுமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்து இருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறை அவகாசம் கோரியதாலும், புகார்தாரர் மகேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வழக்கை உயர்நீதிமன்றம் (வெள்ளிக்கிழமை) 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.   …

The post நில மோசடி வழக்கு…முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: