லாகூர்: பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தையும், அதன் புனித நூலான குரானையும் களங்கப்படுத்துவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இதில், ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த ஒருவர், குரான் வாசகங்கள் அடங்கிய போஸ்டரை கிழித்ததற்காக பெரிய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, உயிருடன் எரித்து கொன்றது. சமீபத்தில் குரானை கிழித்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், மரத்தில் கட்டி அடித்து கொல்லப்பட்டார். இந்நிலையில், இதே மாகாணத்தில் முகமது நபிகளை களங்கப்படுத்தியதாக இஸ்லாமிய சிறுபான்மை ஷியா பிரிவை சேர்ந்த வாசிம் அப்பாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது….
The post நபிகளுக்கு களங்கம் பாக்.கில் ஒருவருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.