நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று: வைகோ வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களின்  பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  நல்லாட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான் அடிப்படைக் காரணம்.  தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலை  பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளாட்சித்  தேர்தல் வெற்றி மூலம் தமிழக மக்கள் அளித்துள்ளனர். வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி. தமிழ், தமிழர்,  தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல்  பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி உள்ள திமுக  தலைமையிலான கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறேன்….

The post நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று: வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: