பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்திற்கு ‘பேமிலி ஸ்டார்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். கூடுதலாக, இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் பொங்கலுக்கு குண்டூர் கராம், ஈகிள், ஹனுமான் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

The post பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: