திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது

சென்னை: திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள 49-வது வார்டு வாக்குச்சாவடி முகாமில் திமுக பிரமுகர் நரேஷ் இருந்தார். இந்நிலையில், வாக்குசாவடிக்குள் இருந்த நரேசை திடீரென வாக்குசாவடிக்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் அவரது சட்டையை கழற்றி அவரை அடித்து இழுத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேஸ்புக்கிலும் வெளிவந்தது. இதில், நரேஷ், சட்டையை கழற்ற மறுத்தபோது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டி காட்சிகள் வெளியானது. இதற்கு திமுக மற்றும் பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது புகார் அளித்துள்ளார்.இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் 8 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைதல், அரை நிர்வாணப்படுத்தி அடித்தல், குழப்பம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இரவு தங்கியிருந்தார். இரவு 8 மணிக்கு இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் சுந்தரவதனம், உதவி கமிஷனர் இருதயம், இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்றனர். வீட்டில் இருந்த ஜெயக்குமாரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது, தான் வர முடியாது என்று ஜெயக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, ஜெயக்குமாரின் மகனும், தென் சென்னை எம்பியுமான ஜெயவர்த்தன் வீடியோ எடுத்தார். பின்னர் அதிமுகவினருக்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார்.ஆனால். போலீசார் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் வேனில் ஏற்றப்பட்டு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வடசென்னையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்….

The post திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: