ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

ஆற்காடு :  ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.ஆற்காடு தாலுகா, புதுப்பாடி உள்ள வட்டம்,  சக்கரமல்லூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று  பசுமாட்டை அவர்களது வீட்டிற்கு பின்புறம் கட்டி வைத்துள்ளார் அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில், மாடு அலறியது.இதைக்கேட்டு ஓடி வந்து பார்த்த வெங்கடேசன், மாடு மீது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து விஏஓ ராஜேஷ்க்கு  தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விஏஓ  ராஜேஷ்  இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்திற்கும், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுக்கும்  தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மின் வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து பசுமாட்டை அப்புறப்படுத்தினர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வந்து  பிரேத பரிசோதனை செய்த பிறகு இறந்த பசுமாடு வெங்கடேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விவசாயி வெங்கடேசன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

The post ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: