நகர்ப்புற தேர்தலை நடத்துவது நாங்கள் இல்லை: புகாரளித்த அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்..!

டெல்லி: உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என ட்விட்டரில் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை,கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக பாஜகவும், அதிமுகவும் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, தனது டிவிட்டரில் சில வீடியோக்களை இணைத்து டிவிட்டரில் பதிவிட்டருந்தார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த வீடியோக்களைப் பாருங்கள். இதைப் பார்த்தாலே, எந்த அளவுக்கு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்தில் வாக்குப் பதிவு நாளன்று நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையம் தனது வாக்கு எண்ணிக்கை தினத்திலாவது தனது கண்களை மூடிக் கொண்டிருக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து கருத்து தெரிவித்திருந்தார். உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என ட்விட்டரில் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார் அண்ணாமலை.  …

The post நகர்ப்புற தேர்தலை நடத்துவது நாங்கள் இல்லை: புகாரளித்த அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்..! appeared first on Dinakaran.

Related Stories: