மறைமலைநகர் நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் 21 வேட்பாளர்களும் வெற்றிபெற உழைக்க வேண்டும்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி  நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, மறைமலைநகர் நகராட்சியில் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், காட்டாங்கொளத்துர் வடக்கு ஒன்றிய செயலாளருமான ஆராமுதன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளரும் மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு திமுக வேட்பாளருமான ஜெ.சண்முகம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான மக்களாட்சி நடக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதல்படி அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைய, மறைமலைநகரின் 21 வார்டுகளிலும் கடுமையாக உழைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும். இந்த வெற்றிக்கனியை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மறைமலைநகரில் பல நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றால், நகராட்சியில் திமுக வெற்றிப்பெற வேண்டும் என்றார். தொடர்ந்து, கோபி, நல்லாம்பாக்கம் வாசு, நெடுங்குன்றம் சுரேஷ்பாபு, குணா, குமிழி கோதண்டபானி, அம்சவள்ளி, கே.பி.ராஜன், தீபன், எம்.பி.ஷண்முகம், ராஜேந்திரன், தினகரன், முத்தமிழ்ச்செல்வி ஷண்முகம், கார்த்திக், கீரப்பாக்கம் ராஜேந்திரன் உள்பட 21 வார்டுகளுக்கும் தேர்தல் பணி பொறுப்பாளர்களை  நியமித்து, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அறிமுகப்படுத்தினார்….

The post மறைமலைநகர் நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் 21 வேட்பாளர்களும் வெற்றிபெற உழைக்க வேண்டும்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: