ஹிஜாப் போராட்டம் எதிரொலி!: கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிநிற துண்டு அணிந்து மாணவர்களில் ஒருபிரிவினர் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக மத வழிபாடு அடையாளங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருபுறம் ஹிஜாப் சர்ச்சை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்த 2 மாதங்கள் மட்டும் ஏன் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என மாநில நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. ஏற்கனவே கல்வித்துறை அமைச்சர், இந்த விவகாரத்தில் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்று வன்மமான விஷயத்தை முன்னெடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சூழல் குறித்து டெல்லியில் இருந்தபடியே முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டறிந்தார். இன்று காலை இந்த விவகாரம் சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஹிஜாப் தொடர்பான வழக்கு என்பது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதற்கேற்றவாறும், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். …

The post ஹிஜாப் போராட்டம் எதிரொலி!: கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: