×

ஆன்லைன் டிரேடிங் ரூ.50 லட்சம் நஷ்டம்; பைனான்ஸ் மானேஜர் தற்கொலை

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(36). தனியார் பைனான்ஸ் கம்பெனி மானேஜர். மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் ரூ.50 லட்சம் வரை செலுத்திய நிலையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வேலூரில் உள்ள பெட் ஷாப்புக்கு மருந்து வாங்கி வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு காரில் சென்றுள்ளார்.

மதியம் 1 மணியளவில் மனைவிக்கு போன் செய்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். போன் நம்பர் வைத்து டிராக் செய்து பார்த்ததில் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு அருகே காரில் மயங்கிய நிலையில் சங்கர் இருந்துள்ளார். அவரை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

The post ஆன்லைன் டிரேடிங் ரூ.50 லட்சம் நஷ்டம்; பைனான்ஸ் மானேஜர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Shankar ,Chetukkarai Vinayagapuram, Kudiyatham, Vellore district ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...