தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

12 செமீ முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 2, 6, 7, 8 ஆகிய 4 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி. சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.02) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: