இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாகக் கூடும். இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடி மழை தீவிரமடைந்து மழைப் பொழிவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
The post ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பதிவாகும்: வெதர்மேன் கணிப்பு appeared first on Dinakaran.
