பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பலர் உயிரிழந்துள்ளனர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், போர் முனையால் அழிக்கப்பட்ட இடத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் இந்த மனித தலைகள் உணவுக்காக அல்லாடுகின்றன. போர் சூழல் ஒரு இனக்குழு மக்களை எத்தகைய நெஞ்சம் பதற வைக்கும் சூழலுக்கு தள்ளி இருக்கிறது என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி.
