ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. அங்கு சுமார் 4 மீட்டர்(13 அடி உயரம்) வரை அலைகள் எழுந்தன. ரஷியாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியது.
