உணவு டெலிவரி ஊழியர் உள்பட இருவர் கொலை

சென்னை: சென்னை காமராஜர் சாலை நடுக்குப்பம் 3வது தெருவை சேர்ந்த அஜித்குமார் (24), பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் பணிமுடிந்து வீட்டிற்கு வந்தபோது, அவரை வழிமறித்த மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த அஜித்குமாரை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருவல்லிக்கேணியை சேர்ந்த ரியாஷ் பாஷா (20), வினோத்குமார் (21), சலீம் (20), ஆகாஷ் (21), ரிஸ்வான் (18), கார்த்திக் (23), தமிழரசன் (22) ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திரிசூலம் அன்னை அஞ்சுகம் நகர் விரிவு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40), அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடன் கொடுத்திருந்தார். அதை நீண்ட நாட்களாக திருப்பி தராததால் ஆத்திரமடைந்த பாஸ்கர், நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் ஜோதி (38), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாஸ்கரை கடப்பாரையால் தலையில் அடித்தார். இதில், பாஸ்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஜோதி, அவரது கூட்டாளி தமிழ் ஆகியோர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்….

The post உணவு டெலிவரி ஊழியர் உள்பட இருவர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: