சிவகாசி: சிவகாசி ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 அறைகள் தரைமட்டமானது. பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.