பந்தலூர் அருகே சேற்றில் கால்பந்து போட்டி: தாளூர் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

பந்தலூர், ஜூலை 20: பந்தலூர் அருகே தாளூர் கலை அறிவியல் கல்லூரியில் சேற்றில் கால்பந்து விளையாடி அசத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான எருமாடு, தாளூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் கால்பந்து விளையாட்டில் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேற்றில் கால்பந்து விளையாடும் போட்டி கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வருகின்றது.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வயல்வெளிகளை உழுது தண்ணீர் நிரப்பி சேற்றில் கால்பந்து விளையாடும் போட்டியை நடத்தி மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சேற்றில் கால்பந்து விளையாடும் போட்டி நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள வயல்வெளியில் நடைபெற்றது.

இதில், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள வயநாடு மற்றும் கல்லூரி மாணவர்கள் அணிகளாக பிரிந்து கலந்து கொண்டு விளையாடி சேற்றில் கால்பந்து விளையாடி அசத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

The post பந்தலூர் அருகே சேற்றில் கால்பந்து போட்டி: தாளூர் கல்லூரி மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: