திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரத்தில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போலி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது சலீம், முகமது ஹூரிடாய் உசேன், முகமது இம்ரான் அலி உள்பட 28 பேரை கடந்த பிப்ரவரி 25ம் தேதி கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
The post வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.