ரூ.3.99 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.பி துவக்கி வைத்தார்

 

மொடக்குறிச்சி, ஜூலை 6: மொடக்குறிச்சி பேரூராட்சியில் தார் சாலை, கான்கிரீட் சாலை, வடிகால் வசதி என ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு கே.ஈ பிரகாஷ் எம்.பி பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்தி பாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்காட்டு தோட்டம், செந்தூர் நகர், அண்ணா நகர், தூரபாளையம் கம்பர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கும், அரசு மருத்துவமனை அருகில் உள்ள வஉசி வீதி, வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதி, தூரபாளையம் திருவள்ளுவர் வீதி ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கும் 10-வது வார்டில் பூந்துறை சாலை முதல் மொடக்குறிச்சி சந்திப்பு வரை வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினார்.  மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி பேரூர் திமுக செயலாளர் சரவணன், செயல் அலுவலர் ரமேஷ் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஞானசுப்பிரமணி, தனலட்சுமி பழனிச்சாமி, பிரதீபா முருகேசன், காந்திமதி ரவிச்சந்திரன், செல்வி இளங்கோ, கண்ணுச்சாமி, மகன்ய ஆனந்த், ஜெயலட்சுமி பாபு, சித்ரா, செல்வராஜ் பேரூர் துணைச்செயலாளர் தன வெங்கடேஷ், அவைத்தலைவர் பழனிச்சாமி, மில் மணி, செந்தில்குமார், ரமேஷ், சீனிவாசன், முருகேசன், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ரூ.3.99 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்.பி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: