நரி, கீரி வேட்டை நான்கு பேர் கைது

 

வேடசந்தூர், ஜூலை 5: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வனப்பகுதிகளில், அய்யலூர் வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயன்ற இருவரை, வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் பழநி பெத்தநாயக்கனூரை சேர்ந்த பாபு (52), காளிதாஸ் (45) ஆகியோர் என தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதேபோன்று கீரியை வேட்டையாடியதாக கோட்டாநத்தத்தை சேர்ந்த சுரேஷ் (46), முத்துச்சாமி (55) ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நரி மற்றும் கீரி இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

The post நரி, கீரி வேட்டை நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: