விழுப்புரம்: ஒரத்தூர் கிராமத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தில் மாணவர்கள் லிஃப்ட் கேட்டு வந்த நிலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.