மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, பயணிகள் சென்னை வந்து சேர்ந்தனர்.