புதுக்கோட்டை, ஜூன் 24: புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர் குறைகள் குறித்த மனுக்களை அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக வழங்கலாம்.
மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர், விதவையர் கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்குதல் வேண்டும். மேலும், மனு அளிக்க விரும்பும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை அளிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்
The post புதுக்கோட்டையில் வரும் 27-ல் நடக்கிறது; முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.
