தகவலறிந்து பாணாவரம் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி ஜாபர்சாதிக் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக அமைப்பு செயலாளரான அ.மா.கிருஷ்ணனின் சித்தப்பா மகன் என தெரியவந்தது. பாலகிருஷ்ணனை கொன்றது யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தகவலறிந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் பாணாவரம் போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் சோளிங்கர் அருகே பாமக நிர்வாகியான வக்கீல் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது பாமக நிர்வாகியின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வக்கீல் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மக நிர்வாகி உறவினர் வெட்டிக்கொலை: சோளிங்கரில் அடுத்தடுத்து சம்பவத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.
