தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,120க்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 வரை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,210க்கும், பவுனுக்கு ரூ.440 ரூபாய் குறைந்து ஒரு பவுன் ரூ.73,680க்கும் விற்பனையானது. அதேபோல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது appeared first on Dinakaran.
