ரூ.85 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்

 

காரைக்கால், ஜூன் 19: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தோமாஸ் அருள் திடல் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் விதமாக புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரூ.76.60 லட்சம் மற்றும் சமத்துவபுரம் பகுதிக்கு ரூ.9.80 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இத்திட்டம் முடிவுறும் பட்சத்தில் சுமார் 1500 நபர்கள் பயன் அடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நீர் பாசனம் நிர்வாகப் பொறியாளர் மகேஷ், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post ரூ.85 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: