இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவங்களைவைத்தும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளை கும்பலுக்கும் வீட்டு வேலைக்காரர் சக்திவேலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில், சக்திவேல், அவரது நண்பர் இளவரசன் (49), திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரி (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் இளவரசனும், சாந்தகுமாரியும் திருப்பதியில் பதுங்கியுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று திருப்பதிக்கு சென்று அவர்களை பிடித்தனர். அவர்களை வாணியம்பாடிக்கு கொண்டு வந்து விசாரித்துவிட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
3 பேரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருப்பதாவது;
சக்திவேல் வீட்டு வேலை பார்த்ததுடன் அடிக்கடி பெயிண்டர் வேலைக்கும் சென்று வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல், தான் தொழிலதிபரின் வீட்டிலும் வேலை பார்த்து வருவதாகவும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் வந்துசெல்வதாக இளவரசனிடம் கூறியுள்ளார். தொழிலதிபர், அவரது மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் இளவரசன் மற்றும் சக்திவேல் இருவரும் தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்தால் வசதியாக வாழலாம் என முடிவு செய்து இளவரசன் தனக்கு பழக்கமான ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரியுடன் சேர்ந்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார். இதன்பிறகு 3 பேரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் அருண்குமார் உதவியை நாடியுள்ளனர். அவர் கொடுத்த யோசனைப்படி 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை ஏற்பாடு செய்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் அருண்குமாரை திருமலை காவல்துறை உதவியுடன் கைது செய்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்தனர். தொழிலதிபர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் யார், தற்போது எங்கு பதுங்கியுள்ளனர்? என்று அருண்குமாரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
The post தொழிலதிபர், மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை; போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.
