திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நாளை (19ந் தேதி) மாலை 4 மணியளவில் திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேற்படி, கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: