வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் மருதூர்ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், வைரவநாதன், தாமரைச்செல்வன், பாலராமன், ராஜரத்தினம், எழிலரசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேதாரண்யம் மேற்கு ஒன்றியத்தில் ஊராட்சி கிளைகள் தோறும் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பது என திர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயமுருகன் பேசியதாவது:
வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் கழகத் தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் 200 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் நாடு போற்றும் நல்லாட்சி அமைக்க திமுக அரசு ஆற்றி உள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, தொடர்ந்து இளைஞர் அணி பாடுபட வேண்டும். 2026க்கான தேர்தல் பணிகளை உடனடியாக துவங்கி, வீடு வீடாக சென்று தின்னை பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
The post வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.
