வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்படி அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குவாரி உரிமைதாரர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு மீதத் தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களில் இழப்பீட்டுத் தொகையை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.
The post சுற்றுச்சூழல் ஒப்புதலின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் 100% தொகையை குவாரி உரிமையாளர் தர வேண்டும் என்ற அரசு உத்தரவு உறுதி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
