புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் தோஹா மாவட்டத்தில் உள்ள கிரு நீர்மின் திட்டத்தின் சுமார் ரூ.2200கோடி மதிப்புள்ள குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையும் நடத்தினார்கள். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்து வந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மாலிக் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் வீரேந்தர் ராணா மற்றும் கன்வர் சிங் ராணா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்னர் சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
The post நீர்மின் திட்டத்தில் ஊழல் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை appeared first on Dinakaran.