புலிகள் கணக்கெடுப்பு பணி: காரையாறு கோயிலுக்கு செல்ல 6ம்தேதி வரை தடை நீடிப்பு

வி.கே.புரம்: கொரோனா பரவல் மூன்றாம் அலை எதிரொலியாக கடந்த 7ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் வழக்கம்போல கோயில்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். தாமிரபரணியில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர். ஆனால் காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் பக்தர்கள் செல்ல தடை 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதால் காரையாறு சொரிமுத்தைய்யனார் கோயிலில் பக்தர்கள் செல்வதற்கு தடை உள்ளது. இதனால் பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது. இதேபோல் அகத்தியர் அருவிக்கு செல்லவும் 6ம் தேதி வரை தடை உள்ளது. இதனால் பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது….

The post புலிகள் கணக்கெடுப்பு பணி: காரையாறு கோயிலுக்கு செல்ல 6ம்தேதி வரை தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: