இவ்விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். அப்போது, மாநாட்டில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (16.05.2025) காலை 10.00 மணிக்கு விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைப்பெற உள்ளது.
The post பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும்: ராமதாஸ் அறிவிப்பு! appeared first on Dinakaran.
