சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். ஆளுநர்களை கொண்டு மாநில அதிகாரங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. கல்விநிதி, வரிப்பகிர்வு, நிர்வாக அதிகாரத்தில் மாநிலங்களின் உரிமைகளை குறைத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.