காரில் 30 கிலோ குட்கா கடத்தியவர் கைது

தர்மபுரி, மே 13: காரிமங்கலம் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாளம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்த போது, அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திரகுமார்(41) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 30 கிலோ குட்கா மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை கைப்பற்றினர். இதேபோல், மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து சென்றபோது குட்கா விற்ற ராஜூ(63) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 கிராம் குட்காவை கைப்பற்றினர். பாலக்கோட்டில் 200 கிராம் குட்கா விற்ற ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post காரில் 30 கிலோ குட்கா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: