பாகிஸ்தான்: எல்லையில் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் வான்வெளியை பாகிஸ்தான் திறந்தது. பாகிஸ்தானின் வான்வெளி அனைத்து வகையான விமானங்களுக்கும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நாட்டு விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.